அஜேயா 90
ஆனால், ராகவ் தனது வலது கையை இறுக்கமாக மூடியதும்… அவனது உள்ளங்கையில் அதே தங்க நிற வாளின் ஒளிக்கீற்று பிளாஸ்மா வடிவத்தில் மின்னி, மீண்டும் அமைதியானது.
தனது உடலுக்குள் நிறைந்திருந்த அந்த அளவற்ற சக்தியை உணர்ந்த ராகவ், தூய்மையான புன்னகையைச் சிந்தினான்.
இனி அந்த வாளைத் தனது கைகளில் சுமக்க வேண்டிய அவசியமில்லை. அந்த அஜேய சக்தி என்றென்றும் அவனது இதயத்திலும், ஆன்மாவிலும் தர்மத்தைக் காக்கும் கவசமாக நிலைத்திருக்கும் என்பதை அவன் முழுமையாக உணர்ந்துகொண்டான்!
ராகவின் உடலுக்குள் அந்தத் தெய்வீக சக்தி முழுமையாகக் கலந்துவிட்டது. அந்தப் பிரம்மாண்டமான ஒளி மெல்ல அமைதியடைந்ததும், அருகில் நின்றிருந்த சியாவின் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாகப் பெருகியது.
எண்ணூறு ஆண்டுகாலப் பிரிவு… சென்ற பிறவியில் நிறைவேறாமல் போன காதல்… இந்தப் பிறவியில் எதிர்கொண்ட மரண பயங்கள், போராட்டங்கள், வேதனைகள்… அனைத்தும் அந்த நொடியில் ஆனந்தக் கண்ணீராகக் கரைந்துபோயின.