**அஜேய – 43 **
சியா தனது கேமராவைப் பக்கத்தில் வைத்துவிட்டு., ராகவைப் பார்த்தவாறு ஒரு அமைதியான புன்னகையைச் சிதறினாள்..
“ராகவ்… இந்தப் பகுதியில் ஏதோ ஒரு விசித்திரமான பவர் உள்ளது. இங்கு வந்த பிறகு எனது மனத்திலுள்ள அந்தப் பயம், அந்த நைட்கேர் பெயின் எல்லாமே மறைந்துவிட்டன. பல நாட்களுக்குப் பிறகு நான் இவ்வளவு அமைதியை உணர்கிறேன்,” என்றாள் மிக சாஃப்டாக..
ராகவ் சியாவைப் பார்த்துவிட்டு, “ஏனென்றால்… நீ உனது சொந்த வீட்டிற்கு வந்துவிட்டாய் பேபி.. இந்தக் கோயிலை முற்பிறவியில் நாமே கட்டினோம்,” என்றார் மிக ஆத்மார்த்தமாக..
ராகவும் சியாவும் இருவரும் கடந்த காலத்தை நினைவுகூரும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டே.. கோயிலைச் சுற்றி வந்துகொண்டிருந்தனர்..
கோயில் வளாகத்திலுள்ள அந்த விசித்திரமான அமைதி படிப்படியாக இன்னும் ஆழமாக மாறியது. சுற்றியுள்ள அடர்ந்த மரங்களின் இலைகள்கூட அசையவில்லை..