** அஜேய – 44 **
அந்தக் கனவில் முகமே தெரியாமல், நூற்றுக்கணக்கான எதிரிகளை வெட்டிச் சாய்த்தபடியே தன் பக்கம் வரும் அந்தப் சக்திவாய்ந்த வீரன்… வேறாரும் இல்லை, இந்த ராகவா ராயன் தான் என்பதற்கு அவளுக்கு ஆதாரம் கிடைத்தது..
அந்தப் பிறவியில் அவன் அவளைக் காப்பாற்றுவதற்காகத் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் போராடினான்..
இந்தப் பிறவியிலும் லண்டனிலிருந்து தன் வேர்களைத் தேடி, கேவலம் அவளுக்காகவே இந்த அடர்ந்த காட்டுக்குள் வந்திருக்கிறான்..
சியா நடுங்கும் கரங்களால் அந்த கருங்கல் சாசனத்தில் இருந்த மைதிலி என்ற பெயரைத் தொட்டாள்..