** அஜேய – 45 **
ராகவ் தனது உள்ளங்கையைச் சாசனத்திலிருந்து எடுத்துவிட்டான்.. ஆனால் அந்த ஒளி அப்படியே நிலையாக அந்தப் பாறையின் மீதுதான் உள்ளது. அவன் மெதுவாக முழங்கால்களில் அமர்ந்து, அந்த ஒளிரும் பாறையின் அருகில் நகர்ந்தான்..
சியாவும் ராகவின் பின்னாடி வந்து நின்றாள்.”ராகவ்.. அந்தப் பாறை மற்ற பாறைகளைக் காட்டிலும் சற்று வித்தியாசமாக உள்ளது.. அதன் மீது ஏதோ டிசைன் உள்ளது பார்,” சியா கீழே குனிந்து கவனித்தவாறு கூறினாள்..
ராகவ் தனது பையிலிருந்து ஒரு சிறிய பிரஷ், கிளீனிங் லிக்விடை எடுத்தான். அந்தப் பாறையின் மீது நூற்றாண்டுகளாகப் படிந்திருந்த மண்ணை, பாசியை மெதுவாகச் சுத்தப்படுத்தத் தொடங்கினான்..
மண்ணும் நாசியும் விலக விலக.. அந்தப் பாறையின் மீதுள்ள உண்மையான ரகசியம் வெளிப்பட்டது. அது ஒரு பெரிய பாறைப் புதிர் (Puzzle)..
அந்தப் பாறையின் மீது மூன்று வட்டங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வட்டத்தின் மீதும் சில விசித்திரமான குறிகள், அடையாளங்கள் உள்ளன..