**அஜேய – 28 **
ராகவ் சியாவின் கண்களில் தெரியும் ஆச்சரியத்தைப் பார்த்தபடியே..”யெஸ், ஐ ஆம் ராகவ்… அண்ட் யூ… சியா.. தி மாடர்ன் ஆர்ட்டிஸ்ட் ஹூ ஈஸ் ஷேக்கிங் ஹைதராபாத் வித் ஹர் பெயிண்டிங்ஸ்.. ரைட்”
ஹ்ம்ம்.. நான் ராகவ்தான்.. நீ.. பிரபல ஹைதராபாத் மாடர்ன் ஆர்ட்டிஸ்ட் சியாதானே.. என்று கேட்கிறான்.. சிறிய புன்னகையுடன்..
அவனது உதடுகளில் நிலைக்கும் அவனது சிரிப்பு அவளைச் சம்மோகனப்படுத்துகின்றது.. அவனது சிரிப்பையே பார்த்துக்கொண்டிருக்கும்..
சியா.. மனதிற்குள்..நான் வெறும் பெயிண்டிங்குகள் மட்டுமே வரையவில்லை ராகவா.. நான் வரையும் ஒவ்வொரு படத்திற்குள்ளும், எனது ஒவ்வொரு கனவிற்கும் பின்னால்… உனது இந்த முகம் உள்ளது.. என்று நினைத்துக்கொள்கிறாள்….
சியாவின் வார்த்தைகளைக் கேட்டது போலவே.. அவளை நோக்கி ஒரு அடி முன்னோக்கி நடந்தான் ராகவ்.. அவனது கண்களில் ஒரு விசித்திரமான கூர்மை தெரிகிறது..