**அஜேய – 11 **
அவளது குரல் அந்த புக் ஸ்டோரின் நிசப்தத்தில் மிகத் தீவிரமாகக் கேட்டது…”நீ எதை ஒவ்வொரு நாளும் வரும் ஒரு சாதாரணக் கனவு என்று நினைக்கிறாயோ… அது உனது பிரமை அல்ல ராகவ்..
அது உனது எதிர்காலத்தை, இந்த உலகத்தை மாற்றப் போகிற ஒரு பயங்கரமான உண்மை! காலம் தனது வட்டத்தை முழுமையாக்குவதற்காக உன்னை மீண்டும் பின்னோக்கி அழைக்கிறது. நீ பிறந்த நிலத்தை நோக்கி உன் காலடிகள் பதிந்துகொண்டிருக்கின்றன.” என்று இந்த முறை தெளிவாகக் கூறியதுமே..
அவளது வாயிலிருந்து அவனது பெயர் ‘ராகவ்’ என்று வந்ததும் அவனது முதுகெலும்பில் ஒரு விசித்திரமான குளிர் பரவியது.. லண்டனில் பிறந்து வளர்ந்த ஒரு டாப் பேராசிரியரின் பெயர்..
இந்த அம்மாவுக்கு எப்படித் தெரிந்தது? அதுவும் தனது பிறப்பின் மூலங்கள்.. தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் லண்டனில்தானே என்று நினைத்துக்கொண்டே.. ராகவ் எதையோ கேட்கப் போவதற்குள்..
அவளது வார்த்தைகளை அவள் மீண்டும் தொடர்ந்தாள்.”ஆனால் கவனமாக இரு இளவரசனே! நீ அங்கு செல்லும் பயணத்தில்… நூற்றாண்டுகளுக்கு முன்பு நீ விட்டுச்சென்ற உனது காதல் மட்டும் இல்லை..