* * அஜேய – 12 * *
” அந்தப் பரபரப்பான சூழ்நிலைக்குள் ராகவ் மிக அமைதியாக, கம்பீரமாக நுழைந்தான்.. அவனது பாடி லாங்குவேஜில் எங்குமே எந்தக் கும்மளமும் இல்லை.. “
ராகவின் முறை வந்தது.. அவன் நேராகக் காலியாக இருந்த ஒரு ஸ்கேனிங் பெல்ட்டிற்கு அருகில் வந்தான். தனது வலது தோளில் இருந்த ஹேண்ட்-கிராஃப்டெட்டட் லெதர் டிராவல் பையை பெல்ட்டிற்கு அருகில் இருந்த ஒரு கிரே கலர் பிளாஸ்டிக் ட்ரேயில் மிகக் கவனமாக வைத்தான்..
அதன் பிறகு தனது உடலில் இருந்த டார்க் கிரே ஓவர்கோட்டையும் கழற்றி மற்றொரு ட்ரேயில் வைத்துவிட்டு, மெட்டல் டிடெக்டர் ஃப்பிரேம் வழியாக மறுபுறத்தை நோக்கி நடந்தான்..
” சரியாக அதே நேரத்தில்… செக்யூரிட்டி ரூமிற்குள் எக்ஸ்-ரே ஸ்கேனர் மானிட்டருக்கு முன்பு அமர்ந்திருந்த ஒரு மூத்த பிரிட்டன் செக்யூரிட்டி ஆபீசரின் பார்வைகள் ராகவின் பையை நோக்கிச் சென்றன.. “
பை ஸ்கேனருக்கு உள்ளே சென்ற சில விநாடிகளிலேயே, அங்கிருந்த பிரிட்டன் செக்யூரிட்டி ஆபீசரின் முகத்தில் மாற்றம் தெரிந்தது..