**அஜேய – 13 **
திரையில் தோன்றும் ‘Unknown Number’ ஐப் பார்த்தபடியே.. புருவங்களைச் சுருக்கிய ராகவ் நடையை நிறுத்தாமல் போனை எடுத்துக் காது அருகில் வைத்துக்கொண்டு..
“ஹலோ, ஹூ இஸ் திஸ்” என்றான் மிகக் கேஷுவலாக..!!
மறுமுனையிலிருந்து ஒரு விசித்திரமான, கம்பீரமான குரல் கேட்டது.. அந்தக் குரலில் ஒரு வகையான கொடூரமும், மைண்ட் கேம்ஸ் விளையாடும் நபரின் கான்பிடென்ஸும் இருந்தது..
அந்த நபர் வேறு யாருமல்ல.. அண்டர்கிரவுண்ட் மாஃபியா கிங் பின்..”ராகவ்… நீ லண்டனைவிட்டுச் செல்வது மிகப்பெரிய தவறு.. சில ரகசியங்கள் பூமிக்கு அடியிலேயே இருந்தால் நன்றாக இருக்கும்..
அவற்றைத் தோண்ட முயன்றால், அந்த பூமியே உன்னை முழுங்கிவிடும். லண்டனில் உனக்கு நல்ல ஃபியூச்சர் இருக்கிறது, அதைப் பாழாக்கிக்கொள்ளாதே.. போர்டிங் கேட்டில் இருந்து திரும்பிச் சென்றுவிடு,” என்று மறுமுனை நபர் எச்சரித்தார்.. அது அவர்களின் ரிவர்ஸ் சைக்காலஜி..