**அஜேய – 23 **
இன்ஜினை ஆஃப் செய்ததுமே… ஒரே வினாடியில் காட்டின் நிசப்தம் அவனைச் சூழ்ந்துகொண்டது. வெறும் பறவைகளின் ஒலி, அருவி நீரின் ஓசை, மரங்களின் இலைகள் அசையும் சத்தம் மட்டுமே கேட்கின்றன..
ராகவ் கார் கதவைத் திறந்து கீழே இறங்கினான். அவனது பிரவுன் லெதர் பூட்டுகள் அஹோபிலம் காட்டு மண்ணைத் தீண்ட… ஆழமாக மூச்சை உள்ளிழுத்தான் ராகவ்…
அந்தக் காற்று அவனுக்கு உயிர் கொடுத்தது.. அந்தக் காற்றிலேயே தனது உயிரும் நின்றுபோனது போல் தோன்றவே.. சுற்றிலும் இருந்த உயரமான மலைகளைப் பார்த்தான்..
இந்த மலைகள், இந்தப் பாறைகள்… இவை எல்லாமே தான் ஒவ்வொரு இரவும் காணும் கனவிலுள்ள பின்னணிக்குச் சரியாக மேட்ச் ஆகின்றன..
ராகவ் மெதுவாக நடந்து அந்த நீரோடைக்கு அருகில் சென்று.. குனிந்து, தனது இரு கைகளிலும் அந்தக் குளிர்ந்த தண்ணீரை எடுத்து முகத்தைக் கழுவிக்கொண்டான்…