* * அஜேய – 26 * *
ராகவ் ரிட்டர்ன் ரிசப்ஷன் ஹாலிற்குச் சென்றபோது.. ராகவின் அறைக்குப் பக்கத்திலிருந்த ரூம் நம்பர் 105 ஐ நோக்கிச் சென்றாள் சியா…
சோர்வுடன் ஃப்ரெஷ் அப் ஆகி வந்த சியா தனது கைகளைக் கழுவிவிட்டு.. ஈரக் கைகளைக் நாப்கினால் துடைத்தபடியே வந்து படுக்கையின் மீது இருந்த அந்த கறுப்பு நிற லெதர் பையை ஓபன் செய்தாள்..
சியா சற்று முன்பு தனது ரூட்டை மாற்றுவதற்குத் காரணமாக இருந்த அந்தத் தூண்டுதலை.. தனது கற்பனையை.. அஹோபிலம் காட்டை தனது ஸ்கெட்ச் புக்கை எடுத்து வரைய விரும்பினாள்.. ஆனால் சியா பையை ஓபன் செய்தவுடனே அவளும் தீவிரமான அதிர்ச்சிக்குள்ளானாள்..
அதில் அவளது கலர் பலெட்டுகள் இல்லை, பிரஷ்கள் இல்லை. அதற்குப் பதிலாக… அதில் நூற்றாண்டுகளுக்கு முந்தைய பழைய ஓலைச்சுவடுகளின் ஜெராக்ஸ் காபிகள், அதேபோல்
‘Confidential – 1857: British East India Company’