* * அஜேய – 25 * *
சியா தனது கையிலிருந்த பையைப் பிடித்துக்கொண்டு, ரிசார்ட் அட்டெண்டன்ட் சொன்னது போல அந்தப் படிகளின் வலது பக்கத்திலிருந்த காரிடார் வழியே ரூம் நம்பர் 105 ஐ நோக்கிச் சென்றுவிட்டாள்..
சியா சென்று சில விநாடிகள்தான் ஆகியிருக்கும்… ராகவ் மீண்டும் காரிடாரிலிருந்து திரும்பி வந்தான்..
ராகவ் தனது ரூம் டோரை ஓபன் செய்யப் போகும்போது தனக்கு ரிசப்ஷனில் தனது பை மறந்துவிட்டது நினைவுக்கு வர உடனடியாகத் திரும்பி வந்தான்..
ராகவ் திரும்பி வருவதற்குள் அந்த ஹாலில் சோஃபா காலியாக இருக்கவே.. அட்டெண்டன்ட்டிடம்..”என் பை எங்கே?” என்று கேட்டான் ராகவ்..
“சார், நமது பாய் ஏற்கனவே உங்கள் லக்கேஜை உங்கள் ரூமிற்கு எடுத்துச் சென்றுவிட்டார் சார்.. ரூம் நம்பர் 104 இல் வைத்திருக்க வேண்டும்,” என்றார் அட்டெண்டன்ட்..