New Katha Varnika is now on Google Play — read original stories on your phone. Learn more
அஜேய – 4
அஜேய 6 min read

அஜேய – 4

**அஜேய – 4**

 

அங்கே பார்வையாளர்களிடையே அமர்ந்திருந்த பேராசிரியர் கார்லிசன் தனது ரீடிங் கிளாஸை சரிசெய்து கொண்டு ராகவைப் மிகவும் ஆர்வமாகப் பார்த்தார்..

 

அவனுக்கு மென்டராக.. அவன் சாதித்த எத்தனையோ விஷயங்களுக்கு அவர்தான் வழிகாட்டி..

 

அப்படிப்பட்டவருக்கு ராகவுக்கு வரும் அந்தக் கனவைப் பற்றி எவ்வளவு தூரம் தெரிந்திருக்கும்..??

 

ராகவ் பிரசென்டேஷன் செய்யும் விதம் ஒரு லெக்சர் போல இல்லாமல், ஒரு அன்சோல்வ்ட் மிஸ்டரி கிரைம் சீனை டிகோட் செய்யும் த்ரில்லர் போல இருந்தது..

 

ராகவ் ஒரு அடி முன்னோக்கி வந்து… கண்களாலேயே தன்னைச் சுற்றியுள்ளவர்களை ஆளுமைப்படுத்துவது போல..

 

“என் ரிசர்ச் பேப்பரின் சாரம்சம் ஒன்றுதான்..”

 

ஹிஸ்டரி இஸ் நாட் ஜஸ்ட் அபௌட் வாட் இஸ் ரிட்டன் ஆன் பேப்பர்ஸ், ஜன்டில்மேன்.. இட்ஸ் ஆல்சோ ரிட்டன் இன் பிளட், அண்ட் ஹிடன் இன் ராக்ஸ், வெயிட்டிங் ஃபிக்கர் தி ரைட் ஹேண்ட் டூ அன்கவர் இட் ..

 

(வரலாறு என்பது ஏடுகளின் மீது எழுதப்படுவது மட்டுமல்ல… இரத்தத்தால் எழுதப்படுவது. அது பாறைகளின் இதயத்தில் மறைந்துள்ளது. அதை வெளியில் கொண்டுவர சரியான கரம் விழ வேண்டும்..)

 

அதுவரை அது வெறும் வதூகை, அல்லது ஒரு கற்பனைக் கதை!” அவ்வளவுதான்.. என்று ராகவ் தனது பைனல் பிஎச்டி பேப்பர் பிரசென்டேஷனை கூலாக முடித்தான்..

 

சில வினாடிகளுக்கு அந்த ஆடிட்டோரியத்தில் ஒரு நிமிடம் பின்-டிராப் சைலன்ஸ்.. அதன் பிறகு, முதன்முதலாகப் பேராசிரியர் மெரினா எழுந்து நின்று கைதட்டத் தொடங்கினார்..

 

மறுவினாடியே, அந்த ஹாலில் இருந்த பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் ஏகமனதாக எழுந்து நின்றனர்..

 

“ஸ்டாண்டிங் ஓவேஷன்! (Standing Ovation!)”

 

லண்டன் பல்கலைக்கழக வரலாற்றிலேயே ஒரு இந்திய தொல்லியல் ஆராய்ச்சியாளருக்கு இவ்வளவு பெரிய அரிய கவுரவம் கிடைப்பது இதுவே முதல்முறை..

 

கைதட்டும் சத்தத்தால் அந்த விண்டேஜ் ஹால் முழுவதுமாக அதிர்ந்தது..

 

ராகவின் உதடுகளில் தனது சொந்தமான கூல், சிக்னேச்சர் ஸ்மைல் ஒன்று மெல்ல மலர்ந்தது.. தலையைச் சற்று குனிந்து, மிகவும் ஸ்டைலாக அனைவருக்கும் நன்றி சொன்னான் ராகவ்…

 

ஆனால், அந்தச் சிரிப்புக்குப் பின்னால், அந்த கான்பிடன்ஸுக்குப் பின்னால் ஒரு மறைக்கப்பட்ட வெறுமை ஊசலாடிக் கொண்டிருந்தது.. சுற்றிலும் இவ்வளவு பேர் கைதட்டினாலும், அவனது மைண்ட் அந்த ஹாலில் இல்லை.. அவனது பார்வைகள் வெறுமையை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தன..

 

அவனது முகத்தில் ஏதோ அறியப்படாத ஏக்கமும், ஒரு இன்கம்ப்ளீட் ஃபீலிங்கும் இருந்தது. இந்த வெற்றி, இந்த கைதட்டல்கள், இந்த லண்டன் வாழ்க்கை… இவை எவையும் அவனுக்குத் தேவையானவை அல்ல என்பது போலிருந்தது அவனது மனநிலை..

 

ராகவ் மேடையிலிருந்து இறங்கிக் கொண்டிருக்க, பேராசிரியர்கள் அனைவரும் அவனுக்கு அருகில் வந்து ஹேண்ட் ஷேக் கொடுத்து வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றனர்..

 

“பிரிில்லியன்ட், ராகவ்!” என்று ஒருவரும்,

 

“பெனாமினல் தீசிஸ்!” என்று இன்னொருவரும் புகழ்கிறார்கள்..

 

ராகவ் அனைத்திற்கும் இயந்திரத்தனமாகப் பதிலளித்துவிட்டு, தனது ஐபேட், நோட்ஸ் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு மெயின் எக்சிட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான்..

 

சரியாக அப்பொழுது அந்த சஸ்பென்ஸ் எலிமெண்ட் ஸ்கிரீனில் பிளே ஆனது.. ராகவ் மேடையை விட்டு வெளியேறிச் சென்றாலும், பின்னால் இருந்த மெயின் பிரொஜெக்டர் ஸ்கிரீன் இன்னும் ஆஃப் ஆகவில்லை.. ஆனால் அவனது பிரசென்டேஷன் ஸ்லைடுகள் அனைத்தும் முடிந்துவிட்டன..

 

ஆனாலும், கடைசி ஸ்லைடுக்குப் பின்னால், பிளிங்க் ஆகும் பிளாங்க் ஸ்கிரீன் மீது ஒரு விசித்திரமான இமேஜ் அட்டாச் ஆகியிருந்தது.. அது ஒரு பழமையான, பாதியாக உடைந்த ஒரு சிம்பல்..

 

பார்க்க, ஒரு சக்திவாய்ந்த வாளைச் சுற்றிலும் கால சர்ப்பம் சுற்றியது போல இருந்த ஒரு விசித்திரமான சின்னம் அது..

 

அதன் கீழே மூன்று எழுத்துக்கள் கொண்ட பண்டைய இந்திய எழுத்துரு மங்களாகத் தெரிகிறது.. அதைப் பார்த்த பேராசிரியர் கார்லிசன் சந்தேகத்துடன் பார்க்க..

 

அதுவரை.. ராகவ் கொடுக்கும் செமினாரை ரகசியமாக ரெக்கார்ட் செய்து கொண்டிருந்த.. பேராசிரியர் வில்லியம்ஸ் ஆச்சரியத்துடன் எதையோ சாதிக்கப் போகிறேன் என்ற கர்த்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்..

 

அந்த ஹாலில் இருந்த சில மாணவர்களும் அந்தத் திரையைப் பார்த்துவிட்டு, அதுவும் ராகவின் ஆராய்ச்சியின் ஒரு பகுதியோ என்று நினைத்து போட்டோ எடுக்கத் தொடங்கினர்..

 

ஆனால் உண்மை என்னவென்றால்… அந்தச் சின்னம் எந்தப் பழங்காலப் புத்தகத்திலும், எந்த மியூசியத்திலும் கிடைத்த ரெக்கார்டு கிடையாது…

 

பேராசிரியர் வில்லியம்ஸுக்குச் சொன்னது போலவே அது ராகவ் தனது கற்பனைகளில் இருந்து, தனது டைரியில் பென்சிலால் ரஃப்பாக வரைந்து கொண்ட அந்த வாளின் ஸ்கெட்ச்..

 

அதை ஸ்கேன் செய்து, ஆக்சிடென்டலாக இந்தப் பிரசென்டேஷன் போல்டரில் சேவ் செய்துவிட்டான்.. ராகவ் அவனுக்கே தெரியாமல்..

 

பிரசென்டேஷன் முடிந்ததும்.. ராகவ் காரிடாரை நோக்கி நடந்து வந்து கொண்டிருக்கிறான்.. ஜன்னல் வழியே வரும் குளிர்காற்று.. சிந்தனைகளில் இருந்த ராகவின் முகத்தைத் தழுவியது..

 

ராகவ்.. பிளேஜர் பாக்கெட்டில் கைகளை விட்டுக்கொண்டு நடந்து சென்றால், அவனது மைண்டில் மீண்டும் அந்த விசித்திரமான எண்ணங்கள் லூப் போலச் சுற்றத் தொடங்கின…

 

நான் வரைந்த அந்தச் சின்னம் என்ன??

 

என் கனவில் வருபவை உண்மையாகவே நடந்த சம்பவங்கள்தானா??

 

நாள் ஆக ஆக என் பிரெய்னை ஏன் அதன்பின்னாடியே அதிகமாய் ஈர்க்கிறது..??

 

பேராசிரியர் வில்லியம்ஸ் சொன்னது உண்மையா.. இல்லை என் கனவுகளை அவர் தனக்குத் தேவையானபடி ஏதாவது உபயோகப்படுத்திக் கொள்கிறாரா..

 

அவர் முப்பது வருடங்களாகத் தேடிவரும் அந்த மிஸ்டரி.. வாள் ஏன் அடிக்கடி என் கனவுகளில் வருகிறது.. இஸ் தேர் எனி ஒன் ட்ராப்பிங் மை மைண்ட்… என்று.. இப்படி ராகவின் மனதில் கேள்விகள் எழும்பின..

 

தனது பிரசென்டேஷன் ஹிட் ஆனது என்ற சந்தோஷத்தை விட, தனக்குள் இருக்கும் அந்த மிஸ்டரியை எப்படி சால்வ் செய்வது என்ற தவிப்பே அவனது ஆட்டிடியூட்டில் தெளிவாகத் தெரிகிறது.. ராகவின் கண்களில்..

 

ராகவ் மிக வேகமாக, தனது பர்சனல் கேபினை நோக்கி அடியெடுத்து வைத்தான்.. அந்த நடையில் ஒரு உறுதியான தீர்மானம் இருந்தது. சயின்ஸையும் லாஜிக்கையும் நம்பும் இந்த மாடர்ன் மைண்ட், தன்னைத் துரத்தும் ஒரு அறியப்படாத கண்ணுக்குத் தெரியாத சக்தியுடன் மைண்ட் கேம் விளையாடத் தயாராகிக்கொண்டிருப்பதாக இருந்தது அந்த நிமிடம்….

 

லண்டன் பல்கலைக்கழகத்திற்குள்ளான காரிடார்கள் அனைத்தும் அமைதியில் மூழ்கின.. கிளாஸ்கள் முடிந்துவிட்டதால் மாணவர்கள் அனைவரும் சென்றுவிட்டனர்..

 

காரிடாரின் இறுதியில் இருந்த ராகவின் பர்சனல் ரிசர்ச் லேப் மட்டும் இன்னும் எரிந்துகொண்டே இருக்கிறது.. அந்த அறைக்குள் காலடி வைத்தோமானால் ஒரு நவீன விஞ்ஞானியின் ஆய்வகத்திற்கு வந்திருக்கிறோமா அல்லது ஏதோ ஒரு பண்டைய சாம்ராஜ்யத்தின் ரகசிய அறைக்கு வந்திருக்கிறோமா என்ற சந்தேகம் வராமல் இருக்காது..

 

ஒருபுறம் அதிநவீன லேப்டாப்கள், உயர் தெளிவுத்திறன் கொண்ட மானிட்டர்கள் டிஜிட்டல் டேட்டாவை டிஸ்ப்ளே செய்து கொண்டிருக்க…

 

மறுபுறம் சுவர்கள் முழுவதும் நூற்றாண்டுகளுக்கு முந்தைய கையால் வரையப்பட்ட வரைபடங்கள், அகழ்வாராய்ச்சியில் கிடைத்த சில பழைய பாறை எச்சங்கள், பூஞ்சைப் பிடித்த பண்டைய ஓலைச்சுவடுகளின் நகல்கள் அமைக்கப்பட்டுள்ளன..

 

அறை முழுவதும் அரைகுறை இருண்ட சூழ்நிலை. லேப்டாப் திரையிலிருந்து வரும் அந்த நீல-வெள்ளை ரேடியேஷன் லைட் மட்டுமே ராகவின் முகத்தில் படுகிறது..

 

சோர்வுடன் ராகவ் தனது பிளேஜரைக் கழற்றிப் பக்கத்தில் வீசினான்.. ஷர்ட் ஸ்லீவ்ஸை முழங்கை வரை மடித்துவிட்டு, சோர்வாக அந்த அறையின் நடுவில் இருந்த மென்மையான சோபாவில் சரிந்தான்..

 

இன்று நடந்த பிரசென்டேஷனின் வெற்றி, பேராசிரியர்களின் பாராட்டு.. இவை அனைத்தும் அவனது மைண்டிலிருந்து எப்போதோ டெலிட் ஆகிவிட்டன.

 

பேராசிரியர் வில்லியம்ஸ் சொன்ன வார்த்தைகளும் அண்ட் பிரசென்டேஷனின் இறுதியில் ஸ்கிரீனில் பிளிங்க் ஆன அந்த ‘வாள்’ சின்னம் மட்டுமே அவனது கண்களுக்கு முன்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது..

 

ராகவின் கண்கள் நன்றாகக் கனத்துப்போயின.. அவனது மூளை ஓய்வை விரும்புகிறது.. அதே சிந்தனைகளுடன்.. ராகவ் மெல்லக் கண்களை மூடிக்கொண்டான்..

 

அவ்வளவுதான்! அடுத்த கணமே… அவனது உணர்வுநிலை லண்டன் லேப்பிலிருந்து திடீரென்று எங்கோ தூக்கி எறியப்பட்டது..

 

காலம் பின்னோக்கி ஓடியது.. நூற்றாண்டுகளின் தூரத்தை ஒரே கணத்தில் கடந்துவிட்டது. ராகவின் மூளைக்குள் காட்சிகளின் வெள்ளம் பாய்ந்துவந்தது..

 

லேபிலிருந்த அமைதி மறைந்து, செவிகள் உடையும் அளவுக்குச் சத்தங்கள் தொடங்கின.. ராகவின் கண்ணிமைகளுக்குப் பின்னால் நகர்கிறது ஒரு காட்சி..

 

ஆம்.. அது ஒரு பெரிய போர்ச்சூழல்! போர்க்களத்தில் குதிரைகளின் கருக்கு அலறல்கள், யானைகளின் பிளிறல்கள், ஒன்றுக்கொன்று பலமாக மோதிக்கொள்ளும் நூற்றுக்கணக்கான கத்திகளின் மோதல் சத்தங்கள் அவன் தலையில் எதிரொலிக்கின்றன..

 

அதைத் தாண்டி மற்றொரு காட்சி… அது ஒரு இருண்ட அடர்ந்த இரவு. வானத்தில் கரிய மேகங்கள் சூழ்ந்துள்ளன..

 

அந்த இருட்டைக் கீறிக்கொண்டு ஒரு பழைய காலத்துக் கோட்டையின் கொத்தளத்தின் மீது தீப்பற்றிக்கொண்டு எரிகின்றன.. அந்தத் தீவட்டிகளின் வெளிச்சத்தில் இரத்தம் ஆறாக ஓடுகிறது..

 

தரையில் முழுவதும் பிணக்குவியல்.. ஏதோ ஒரு கொடூரமான நபர்… உடல் முழுவதும் இரும்புக்கவசம் அணிந்து, கையில் இரத்தம் சிந்திய ஒரு சக்திவாய்ந்த வாலைப் பிடித்துக்கொண்டு ராகவை நோக்கி வேகமாக ஓடிவருகிறான்..

 

அந்த நபரின் கண்களில் ராட்சசத்தனமான சந்தோஷமும், கொடூரமும் தெளிவாகத் தெரிகின்றன. அவனுக்குப் பின்னால் நூற்றுக்கணக்கான போர்வீரர்கள் ராகவைப் பிடிப்பதற்காகத் துரத்திக்கொண்டு வருகிறார்கள்..

 

அங்கே ஒரு கொடூரமான படுகொலை நடந்து கொண்டிருக்கிறது.. திடீரென்று இரத்தம் தெறித்து ஒரு பழைய பாறையின் மீது விழுகிறது.. அந்த அடுத்த கணமே, ஒரு அபாரமான சக்திகள் கொண்ட, திவ்யமான ஒளிகளுடன் ஒரு சக்திவாய்ந்த வாள்… அது பூமிக்குள் ஆழமாகச் செருகப்படுகிறது..

 

அந்த வாளின் கைப்பிடியின் மீது சரியாக அதே சின்னம் உள்ளது… ராகவ் லேபில் வரைந்த அந்த சிம்மச்சின்னம்! அந்த வாள் பூமிக்குள் செருகப்பட்டதும் ஒரு பெரிய ஒளிக்கீற்று வானத்தை நோக்கி எழுந்தது..

 

சரியாக அந்த பிரைட் லைட்டின் நடுவிலிருந்து… ஒரு அழகான பெண்ணின் முகம மிலகாக விசுவலைஸ் ஆனது..

 

அவள் பாரம்பரியமான பண்டைய ராஜகுமாரி உடைகளில் இருக்கிறாள். முகம் முழுவதும் வியர்வை முத்துக்களுடன்.. நெற்றியில் குங்குமம் கலைந்துள்ளது..

 

ஆனால் அவளது கண்கள்.. அவை அற்புதமாக இருக்கின்றன. அந்தக் கண்களில் மரண பயம் இல்லை, ஆனால் ராகவுக்காக ஏக்கம், பிரிந்துவிடுகிறோம் என்ற முடிவில்லாத வேதனை, நூற்றாண்டுகளின் காதல் ஆகியவை தெளிவாகத் தெரிகின்றன..

 

அவளது உடலிலிருந்து இரத்தம் விகிகிறது, ஆனால் அவளது பார்வை மட்டும் ராகவை விட்டே விலகவில்லை. அவள் மெல்ல தனது உதடுகளை அசைக்கிறாள்..

 

“ராகவா…” என்று அவள் கூப்பிடும் அந்த அழைப்பில் உள்ள ஆர்ட்டும், வலியும் ராகவின் இதயத்தைப் பிழிந்தன.. ராகவின் கண்களிலிருந்து அவனுக்கே தெரியாமல் கண்ணீர் வழிந்தது..!!

 

@@@

 

**தொடரும்…**