** அஜேய – 16 **
சியா தனது இடது கையை மெதுவாகத் தனது இதயத்தின் மீது வைத்துக்கொள்ள.. அவளது ஹார்ட் ரேட் அதிகரிப்பது அந்த லாஞ்ச் நிசப்தத்தில் அவளுக்குத் தெளிவாகச் சென்ஸ் ஆனது..
இது இந்தக் காலத்தைச் சேர்ந்த வலி அல்ல.. நூற்றாண்டுகளுக்கு முன்பு, எப்போதோ அர்த்தமந்திரமாக நின்றுபோன தனது காதல் கதை சார்ந்த எல்லையற்ற விரகம், ஒரு பிடிகொடுக்காத வேதனை!
வெளியில் எவ்வளவு பிராக்டிகலாக வாழ்ந்துவிட்டாலும்… தனது ஆன்மாவிற்குள் ஒரு பெரிய வெறுமையை அவள் சுமந்து கொண்டிருக்கிறாள் என்பது அவளுக்குப் புரிந்தது..
காவாஸில் அந்த ‘அஜேய’ வாலைப் பிடித்த அந்த வீரனின் முகத்தை அவள் வரைய முடியாமல் போனதற்குக் காரணம்… அந்த முகம் தன் கண்முன்னே உண்மையாக நடந்து வர வேண்டும் என்று அவளது உள்ளுணர்வு ஆசைப்படுகிறது..
அவளது கண்களின் ஓரத்தில் ஒரு சிறிய கண்ணீர்த் துளி மின்னியது. ஐபேட் திரையை லாக் செய்த சியா