* * அஜேய – 20 * *
சியா தனது வலது கையால் தனது நெற்றியிலிருந்த வியர்வை முத்துக்களைத் துடைத்துக்கொண்டு..
தனது முகத்தை கைகளுக்குள்ளே மறைத்துக்கொண்டு,
“He feels so real, yet so unreachable.”
(அவன் என் இதயத்தின் ஆழத்தில் மிக உண்மையாக, இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறான்… ஆனால் மீண்டும் அதே நேரத்தில் நான் எட்ட முடியாத தூரத்தில் அந்தப் புகைமூட்டத்தில் கரைந்துவிடுகிறான்.) என்று நினைத்துக்கொண்டிருக்கும் சியா..
அந்த நிமிடம் பலமாக நம்புகிறாள்.. அந்த விஷயத்தை ஒவ்வொரு முறையும் தனது கனவில் வரும் வீரன் வெறும் மனப்பிரமை அல்ல..