* * அஜேய – 31 * *
அந்தக் கோட்டின் உண்மையான அர்த்தம் வெளியில் வந்தது. அந்தப் பெயிண்டிங்கில் சியா வரைந்த அந்தப் பாறைகளின் அமைப்பு… அஹோபிலம் காட்டின் உள்ளே உள்ள ‘நவ நரசிம்ம’ கோயில்களில் உள்ள ஒரு சீக்ரெட் பேஸ்மென்ட் கோயிலுக்குச் செல்லும் ஒரு நட்சத்திரங்களின் மேப்.. என்று அர்த்தமானதுமே..
ராகவ்..” ஓ.. மை காட்.. சியா.. உனக்கே தெரியாமல் உனது கைகள் இந்த அண்டர்கிரவுண்ட் கோயிலின் லாக் ஓபன் செய்யும் ரூட் மேப்பை வரைந்துவிட்டன!
உனது ஆழ்மனத்தில் அந்த 800 ஆண்டுகளுக்கு முந்தைய சாம்ராஜ்யத்தின் முழு மேப் லோட் ஆகியுள்ளது, ” என்று நினைத்துக்கொண்டான் ராகவ்..
அவனது மூளையில் ஆர்வம் உச்சகட்டத்தை அடைந்தது..
இப்போது சியா வெறும் தனது முற்பிறவிக் காதலி மட்டுமல்ல…
அந்த ‘அஜேய’ வாளை மறைத்துவைத்துள்ள அந்தச் சீக்ரெட் வால்ட்டின் மெயின் பாஸ்வேர்டுகூட அவளது மூளைக்குள்தான் மறைந்துள்ளது என்ற தெளிவு ராகவிற்குக் கிடைத்தது..