* * அஜேய – 36 * *
மறுபுறம்.. சியாவும் ராகவும் பின்னால் இருக்கும் டேபிளுக்கு அருகிலிருந்த அந்த மாஃபியா மனிதர்களில் ஒருவன்..
ராகவிற்கும் சியாவிற்கும் இடையே நடந்த ஒவ்வொரு விஷயத்தையும் தனது பாஸுக்குப் பளுடூத் (Bluetooth) மூலமாகச் சொல்லிக்கொண்டிருக்க..
அவனை முன்பே கவனித்த ராகவ் சியாவை எரிச்சலூட்டிவிட்டு.. அவளது வேலைக்கு உதவி செய்வது போலச் சீனை மாற்றுகிறான்.. இருவரும் இன்னும் ஓபன் அப் ஆகவில்லை என்பது போல கிரியேட் செய்கிறான்..
ராகவின் கேள்விகளால் சியாவிற்குச் சற்று எரிச்சலாகத் தோன்ற.. மூளையோ ஏன் இன்னும் இந்த மூடுமந்திரமான விளையாட்டுகள் சியா..
உனக்குத் புரியவில்லையா.. உனக்கு முன்னால் இருப்பது ஒவ்வொரு நாளும் கனவில் நீ யாருக்காகக் காத்திருக்கிறாயோ அவன்தான் என்று சொல்லிக்கொண்டே..