* * அஜேய – 7 * *
கார்லிசன் கேட்ட அந்தக் கேள்விக்கு ராகவிடம் பதில் இல்லை.. அவனது லாஜிக்கல் மைண்ட் ஒரே நொடியில் கிராஷ் ஆகிவிட்டது.. அவன் இதற்கு முன்பு எப்போதுமே இந்தியாவில் காலடி எடுத்துவைத்ததே இல்லை..
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள அஹோபிலம் என்ற பெயரை அவன் தனது வாழ்வில் கேட்டதே அவனது கனவில்தான்.. அவனது சீக்ரெட் ரிசர்ச் பேப்பரில்தான்..
அப்படியானால், நூற்றாண்டுகளுக்கு முந்தைய காடுகளில் மறைந்திருக்கும் ஒரு ரகசியப் பாறையின் மீதுள்ள குறி…
அவனது மூளைக்குள் எப்படி வந்தது ?
தனது கைகள் அந்தச் சின்னத்தை காகிதத்தின் மீது எப்படி வரைந்தன?” என்று நினைத்துக்கொண்டு…