அஜேய 99
ராகவ் சியாவைப் பார்த்துக் குறும்பாகக் கண்ணடித்தான்.
“கேட்டாயா மேடம்? இன்றிரவு நம்முடைய இரவு… ஒன்லி லண்டன் தொல்லியல் ஆராய்ச்சியாளரும் டெல்லி ஓவியக் கலைஞரும் இணையும் ஸ்பெஷல் நைட்!” என்று அவளது காதில் மெதுவாகக் கிசுகிசுத்தான்.
சியா அவனது சட்டையைப் பிடித்துக்கொண்டு,
“பாவா… நீ மட்டும் ஒருபோதும் திருந்தவே மாட்டாய்!” என்று செல்லமாகக் கடிந்துகொண்டாள்.
சூரியன் ஹம்பி மலைகளுக்குப் பின்னால் மறையத் தொடங்கியபோது… அரண்மனை முழுவதும் தெய்வீகமான விளக்குகளின் ஒளி பிரகாசித்தது.