** அஜேய – 57 **
சீரியஸாக ஒர்க்கில் மூழ்கியிருந்த ராகவ்.. லேப்டாப் ஸ்கிரீனிலிருந்து கண்களைத் திருப்பி சியாவின் பக்கம் பார்த்தான்..
பிரஷ் நகரும் சத்தம் அந்த அமைதியான அறையில் தெளிவாகக் கேட்கிறது..
ராகவ் ஆச்சரியத்துடன் சியாவைப் பார்த்தவாறு.. எழுந்து மெதுவாக அவளது பின்னால் வந்து நின்றான்..
சியாவின் கைகள் அதிவேகமாக, ஒரு அனுபவமிக்க பழைய சிற்பியைப் போல நகர்ந்துகொண்டிருக்கின்றன..
முதலில் சியா அடர் பச்சை, கறுப்பு நிறங்களுடன் ஒரு பெரிய மலைகளின் வரிசையைக் வரைந்தாள். ஒன்றுக்குப் பின் ஒன்றாக.. கரக்ட்டாக ஏழு மலைகள் அந்தக் கன்வாஸின் மீது உருப்பெற்றன..