** அஜேய – 55 **
வாட்டின் பெயரே விக்ரம்!” விக்ரம் என்ற பெயரைக் கேட்டதுமே சியாவின் இதயம் ஒரே வினாடியில் லயம் தப்பியது..
அந்தப் பெயரைக் கேட்டதுமே அவளது மைண்டில் மீண்டும் அந்த 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எதிரி ராஜ்ய மகாராஜாவான விக்ரமாதித்யா சௌகானின் முகம் மின்னியது..
“விக்ரமா? யார் அவன்?” என்று ராகவ் கேட்டான்..
“அவனொரு இன்டர்நேஷனல் ஆன்டிகுவிட்டி ஸ்மக்லர் (பழங்காலப் பொருட்களை மற்றும் வரலாற்றுச் சிலைகளைத் திருட்டுத்தனமாக வெளிநாடுகளுக்குக் கடத்தும் நபர் )” சார், மேலோட்டமாகப் பெரிய பிசினஸ் மேன் ஆனால் உள்ளே ஒரு கிரிமினல்” என்று சங்கர் ரகசியமாகக் கூறுகிறான்…
“இந்தப் பகுதியில் இருக்கும் பழங்காலச் சிலைகள், சாசனங்கள், விலையுயர்ந்த பொருட்களைத் திருடி வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வது அவனது மெயின் பிசினஸ்..